புதுடில்லி: அரசு உரிமம் பெறாத உணவகங்களை, இரண்டு வாரங்களுக்குள், தங்கள் பட்டியலில் இருந்து நீக்கும்படி, 'ஆன்லைன்' உணவு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கெடு விதித்துள்ளது.
'ஸ்விகி, சோமாட்டோ, புட் பாண்டா, ஊபர் ஈட்ஸ்' போன்ற நிறுவனங்கள், மொபைல் போன் செயலி மூலம், 'ஆர்டர்' செய்யப்படும் உணவுகளை, வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு எடுத்து வந்து கொடுக்கும், சேவையை செய்து வருகின்றன.இதற்காக, பல்வேறு உணவகங்களுடன், இந்த நிறுவனங்கள் வியாபார ஒப்பந்தம் செய்துள்ளன. ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்படும் உணவுகள், தரமற்று இருப்பதாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திடம், தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, ஆன்லைன் உணவு வர்த்தகத்தை முறைப்படுத்தும் பணியை, ஆணையம் துவங்கியது. அதில், ஆன்லைன் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் உணவகங்களில், 30 - 40 சதவீத உணவகங்கள், முறையான உரிமம் பெறாமல் நடத்தப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, உரிமம் பெறாத உணவகங்கள், ஜூலை, 31க்குள், உரிமம் பெற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது. கெடு முடிவடைந்த நிலையில், முறையான அரசு உரிமம் பெறாத உணவகங்களை, இரண்டு வாரங்களுக்குள் தங்கள் பட்டியலில் இருந்து நீக்கும்படி, ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது.