காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் பதவியேற்பு

D.Venkatesh
0
காஷ்மீர் மாநில ஐகோர்ட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார்.
சுப்ரீம் கோர்ட் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு ஐகோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகளை மத்திய சட்டத்துறை அமைச்சகம் நியமனம் செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியத்தின் பரிந்துரைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு இந்த நியமனங்கள் செய்யப்பட்டன. 
முதல் முறை
அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக டெல்லி ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்துவந்த கீதா மிட்டல் நியமிக்கப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே, ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. 
பதவி பிரமாணம்
அந்த வகையில் கீதா மிட்டல் நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு காஷ்மீர் மாநில கவர்னர் என்.என்.வோரா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரிகள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, கவர்னரின் சிறப்பு ஆலோசகர் விஜயகுமார் ஐ.பி.எஸ். மற்றும் அரசு மூத்த உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)
To Top